ஹெலிகாப்டர் விபத்து! 13 பிரெஞ்சு இராணுவ படையினர் பலி

Report Print Abisha in பிரான்ஸ்

மாலியில், ஜிஹாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 13 வீரர்கள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இச்சம்பவம் திகள்கிழமை மாலையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய போராளிகள், மாலியின் வடக்கு பகுதியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2013ஆம் ஆண்டில் வடக்கின் பெரும் பகுதியை போராளிகளை கைப்பற்றியபின் பிரான்ஸ் ஆயிரகணக்கான இராணுவ வீரர்களை மாலிக்கு உதவ அனுப்பியது.

இராணுவம் அப்பகுதியை திரும்ப கைப்பற்றினாலும், தற்போது அங்கு பாதுகாப்பின்மை நிலவி வருகின்றது.

இந்த மாதம் தொடக்கத்தில் மற்றொரு பிரெஞ்சு இராணுவ வீரரான Brigadier Ronan Pointeau வாகனத்தின் அருகில் வெடிபொருள் வெடித்ததில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers