பிரான்சிலிருந்து பெருந்தொகைக்கு அரிய கலை பொக்கிஷத்தை வாங்கிய வெளிநாட்டவருக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

24 மில்லியன் யூரோக்கள் கொடுத்து அரிய கலை பொக்கிஷத்தை வாங்கிய வெளிநாட்டவர் ஒருவர், அதை தன் நாட்டுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கடும் ஏமாற்றமடைந்துள்ளார்.

அரிய கலைப் பொக்கிஷமான படம் ஒன்றை பிரான்சிலிருந்து 24 மில்லியன் யூரோக்களுக்கு ஏலம் எடுத்த அமெரிக்கர்களால் அதை அமெரிக்கவுக்கு கொண்டு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதாவது பிரான்ஸ் அந்த படத்தை தேசிய பொக்கிஷமாக அறிவித்துவிட்டது. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த Christ Mocked என்று பெயரிடப்பட்ட அந்த புகழ் பெற்ற படத்தை வரைந்தவர் பிரபல ஓவியரான Cimabue.

அதை தேசிய பொக்கிஷம் என அறிவித்துள்ள பிரன்ஸ் அதை மீண்டும் வாங்கும் நடவடிகைகளை தொடங்கியுள்ளது.

Photograph: Charles Platiau/Reuters

எனவே அதை ஏலம் எடுத்தவர்களால் அதை இனி அமெரிக்காவுக்கு கொண்டுபோக முடியாது. இவ்வளவு பரபரப்பை பெற்றுள்ள அந்த படம், கொஞ்சம் காலம் முன்பு வரை யார் கண்ணிலும் படாமல் சமையலறை ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்தது.

பின்னர் ஏலம் விடும் ஒருவரின் கண்களில் அது தற்செயலாகப் பட, அதன் மதிப்பு வெளியே தெரிந்துள்ளது.

அந்த படத்தை ஏலத்துக்கு எடுத்தவர்கள், அதை 24 மில்லியன் யூரோக்களுக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்