பிரான்சில் வரும் நாட்களில் விமான சேவை உள்ளிட்ட போக்குவரத்துகள் குறையும்! அரசு முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வரவிருக்கும் நாட்களில் நீண்ட தூர ரயில் பேருந்து மற்றும் விமானப்பயணங்களை படிப்படியாக குறைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சி 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாட்டில் கபேக்கள், உணவகங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடிவிட்டு, மக்கள் தங்கள் நகர்வுகளை மட்டுப்படுத்துமாறு பிரான்ஸ் அரசு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இப்போது, நீண்ட தூர பயணத்தை கண்டிப்பாக அவசியமானதாக மட்டுப்படுத்த முற்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் Elisabeth Borne தலைநகர் பாரிஸில் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

ஒரு சில சர்வதேச விமானங்கள் மட்டுமே பராமரிக்கப்படுவதால், நீண்ட தூர ரயில் போக்குவரத்து இடையில் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

துணை போக்குவரத்து மந்திரி Jean-Baptiste Djebbari, அமெரிக்கா, ஆபிரிக்கா, சில உள்நாட்டு விமானங்கள் மற்றும் பிரான்சின் வெளிநாட்டு பிராந்தியங்களுக்கு சில விமானங்கள் பராமரிக்கப்படும்.

விமான நிலையங்கள் திறந்திருக்கும், ஆனால் விமானநிலையத்தில் இருக்கும் சில முனையங்கள் மூடப்படும் , புதன்கிழமை முதல் தெற்கில் உள்ள ஆர்லி விமான நிலையத்திலும், அடுத்த வாரத்தின் இறுதியில் வடக்கில் சார்லஸ் டி கோலில் விமான நிலையத்திலும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டில், SNCF ரயில் நிறுவனத்தின் நீண்ட தூர ரயில்கள் வரும் நாட்களில் பாதியாக நிறுத்தப்படும் என்றும், பிராந்திய TER சேவை மூன்றில் இரண்டு ரயில்களை இயக்கும் என்றும் Jean-Baptiste Djebbari கூறியுள்ளார்.

எல்லோரும் அத்தியாவசியமற்ற பயணம், ஓய்வு பயணங்களை கைவிட வேண்டும். உடல்நலம், உணவு மற்றும் வேலைக்கு தேவையான பயணங்களுக்கு தங்களை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும், என்று Elisabeth Borne கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்