கொரோனாவை வென்ற 103 வயது பிரெஞ்சு பெண்மணி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் 103 வயது பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார்.

Hélène François என்ற அந்த பெண்மணியை மருத்துவர்களும் செவிலியர்களும் கரவொலி எழுப்பி மரியாதை செலுத்தி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். Hélène மூன்று மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நான் மிகவும் வலிமையானவள், நான் குணமடைய வேண்டும் என்று விரும்பினேன், கொரோனா வந்தது, சென்றது, கடவுளுக்கு நன்றி என்கிறார் Hélène.

ஏற்கனவே ஸ்பானிஷ் ப்ளூவை வென்ற Hélène, தற்போது கொரோனாவையும் வென்றுள்ளார். பிரான்சில் இதுவரை 142,411 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதோடு, 28,108 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் 61,213 பேர் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

connexionfrance

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்