பார்ட்டிக்கு சென்ற சூப்பர் மார்க்கெட் ஊழியரால் பிரான்சில் மீண்டும் ஒரு கொரோனா அலை: அச்சத்தில் மக்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் பிரித்தானி கடற்கரையில் அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றில் பார்ட்டியில் பங்கேற்ற 18 முதல் 25 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளதால் மீண்டும் பிரான்சில் கொரோனா பரவுகிறதா என்ற அச்சம் பரவத்தொடங்கியுள்ளது.

நேற்று மட்டுமே அந்த பார்ட்டியில் பங்கேற்ற 72 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பார்ட்டியில் கலந்துகொண்ட கொரோனா தாக்கிய தற்காலிக சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர்தான் இந்த கொரோனா பரவலுக்கு காரணம் என கருதப்படுகிறது. இதற்கிடையில் தனது 50 வயதுகளிலிருக்கும் Patrice Faure என்ற அலுவலர், கொரோனா தொற்றியவர்கள் கூடிய ஒரு கபேக்கு தானே நேரடியாக சீல் வைத்துவிட்டு வந்ததாக தெரிவிக்கிறார்.

இளைஞர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இரவு நேரங்களில் ஆபத்தை உணராமல் கூட்டம் கூட்டமாக இங்கு கூடுகிறார்கள் என தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் அவர்.

மூடப்பட்ட கபேயின் உரிமையாளரோ, அவர்கள் இளைஞர்கள், விடுமுறையை செலவழிக்க வந்திருக்கிறார்கள், மதுபானம் அருந்துகிறார்கள், சொன்னால் கேட்பதில்லை என்கிறார்.

பாரீஸில் Damien Vaillant-Foulquier என்னும் ஆண் நர்ஸ், அவரது மனைவியும் ஒரு நர்ஸ், மருத்துவமனையில் பணிபுரியும்போது, கொரோனாவின் இரண்டாவது அலையை தெளிவாக உணர முடிகிறது என்கிறார்.

மக்கள் எதிர்வரும் அபாயத்தை உணரவும் இல்லை, எதற்காக வீடுகளுக்குள் அடைபட்டிருந்தோம் என்பதை மறந்தும்விட்டார்கள் என்கிறார்.

சைக்கிளில் பயணிக்கும்போது, இரவில் மக்கள் கூடும் மதுபான விடுதிகளில், கட்டிடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சமூக இடைவெளி குறித்து கொஞ்சமும் கவலையின்றி, மாஸ்கும் அணியாமல் ஆட்டமும் பாட்டமுமாக மக்கள் நிறைந்திருக்கிறார்கள் என்கிறார்.

இளைஞர்கள் பொறுப்பற்று நடப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன, ஆனால் பொறுப்பற்று நடந்துகொள்வது இளைஞர்கள் மட்டுமல்ல என்கிறார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்