மீண்டும் ரத்த ஆறு ஓடும்... பிரபல பிரஞ்சு பத்திரிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த அல் கொய்தா

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து மீண்டும் கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளதால் பிரபல பிரஞ்சு வார இதழ் சார்லி ஹெப்டோவுக்கு அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

2015-ல் நடந்தவை மீண்டும் முன்னெடுக்கப்படும் எனவும் அல் கொய்தா எச்சரித்துள்ளது. ஆனால் குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணையானது பாரீஸ் நகரில் துவங்கியுள்ள நிலையிலேயே சார்லி ஹெப்டோ நிறுவனம் தாங்கள் முன்னர் வெளியிட்ட நபிகள் நாயகம் தொடர்பான கேலிச்சித்திரங்களை மறு வெளியீடு செய்துள்ளது.

இதற்கு தற்போதைய பிரான்ஸ் ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளது கண்டனத்துக்கு உரியது என குற்றஞ்சாட்டியுள்ள அல் கொய்தா, அதற்கான விலையை அளிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

கடந்த 2015 ஜனவரி 7 ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்த சயித் குவாச்சி மற்றும் செரிப் குவாச்சி சகோதரர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர், 4 கார்டூனிஸ்டுகள் உள்பட 12 பேர் பலியாகினர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணையானது செப்டம்பர் 2 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 14 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்