பிரான்ஸ் சுற்றுலா பயணியை தலை துண்டித்து கொடூரமாக கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை! நீதிமன்றத்தில் கதறிய நபர்

Report Print Basu in பிரான்ஸ்
0Shares

2014ம் ஆண்டு பிரான்ஸ் சுற்றுலா பயணியை கடத்தி கொடூரமாக கொன்ற வழக்கில் நபர் ஒருவருக்கு அல்ஜீரியன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மலையேறுபவரான பிரான்ஸை சேர்ந்த 55 வயதான Hervé Gourdel, 2014 ஆம் ஆண்டு அல்ஜீரியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

Hervé Gourdel-ஐ விடுவிக்க வேண்டுமென்றால், ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிராக பிரான்ஸ் நடத்தும் வான்வெளி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என கடத்தல்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரான்ஸ் கோரிக்கையை ஏற்காததால், Hervé Gourdel-ஐ தலை துண்டித்து கொடூரமாக கொன்று, அந்த வீடியோவை கடத்தல்காரர்கள் வெளியிட்டனர்.

மேலும், Hervé Gourdel படுகொலைக்கு தாங்கள் தான் காரணம் என ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய Jund al-Khilafa பொறுப்பேற்றது.

இந்நிலையில், Hervé Gourdel படுகொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரான Abdelmalek Hamzaoui நீதிமன்றத்தில் ஆஜரானார், மற்றவர்கள் ஆஜராகாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Hervé Gourdel-வுடன் சிறைபிடித்து வைக்கபட்டிருந்த நண்பர்கள், கடத்தலில் ஈடுபட்ட நபர்களில் Abdelmalek Hamzaoui-னும் ஒருவர் என்பதை உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து, நீதிமன்றம் Abdelmalek Hamzaoui-க்கு மரண தண்டனை விதித்தது.

நீதிமன்ற விசாரணையின் போது, தனக்கு இந்த கொலையில் தொடர்பில்லை என்றும், இந்த வழக்கை முடிக்க தன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக Hamzaoui நீதிமன்றத்தில் கதறி வாதிட்டார்.

Abdelmalek Hamzaoui-க்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டபோதிலும், அல்ஜீரியாவில் 1993 முதல் மரணதண்டனை விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்