96 வயது முதியவர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவு: ஏன்?

Report Print Raju Raju in ஜேர்மனி
334Shares
334Shares
ibctamil.com

ஜேர்மனியின் வதை முகாமில் பாதுகாவலராக இருந்த நபர் செய்த குற்றத்துக்கு ஏற்கனவே நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

ஓஸ்கர் கிரோனிங் (96) என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் நாசி ஜேர்மனியில் இருந்த அவுஷ்விட்ஸ் வதை முகாமில் பாதுகாவலராக வேலை செய்து வந்தார்.

அப்போது முகாமில் இருந்த 300,000 யூதர்களை கொல்ல ஓஸ்கர் உதவியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் அப்போது அவருக்கு எந்தவொரு தண்டனையும் அளிக்கப்படவில்லை. ஓஸ்கர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பல ஆண்டுகளுக்கு பின்னர் இது தொடர்பாக அவர் மீது கடந்த 2014-ல் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் 2015 யூலையில் ஓஸ்கர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓஸ்கர் சார்ப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஓஸ்கர் அதிக வயதானவராக உள்ளதால் நான்கு ஆண்டுகள் தண்டனையிலிருந்து விலக்களிக்க கோரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து, நான்கு ஆண்டு சிறை தண்டனையை ஓஸ்கர் அனுபவித்தாக வேண்டும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்