Lufthansa விமான நிறுவனத்தின் லோகோ விரைவில் மாற்றம்

Report Print Harishan in ஜேர்மனி

ஜேர்மனியின் பிரபல விமான சேவை நிறுவன இலச்சினையில்(logo) மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் முக்கிய விமான சேவை நிறுவனமாக சிறந்து விளங்கி வருவது Lufthansa ஏர்லைன்ஸ் நிறுவனம்.

இந்நிறுவனதின் இலச்சினையில் பறக்கும் பறவைக்கு பின்னால் மஞ்சள் நிற வண்ணம் செலுத்தப்பட்டு இருக்கும்.

தற்போது உள்ள லோகோவின் மஞ்சள் நிறம் நீக்கப்பட்டு, விமானத்தின் அடிப்பகுதியில் இருந்த சாம்பல் நிறத்தையும் நீக்கிவிட்டு முற்றிலும் வெள்ளை மற்றும் நீல நிறத்தால் ஆன புதிய வடிவம் வெளியாகியுள்ளது.

விமானப் போக்குவரத்து பத்திரிக்கையாளர் அண்ட்ரியஸின் ட்விட்டர் பதிவில், Lufthansa குழுமத்தின் தலைமை அதிகாரி Carsten Spohr கையில் புதிய வடிவத்தின் கணினி படத்தை வைத்திருப்பது போலான புகைப்படம் வெளியாகியுள்ளது.

100 ஆண்டுகள் பாரம்பரியம் நிறைந்த Lufthansa நிறுவனத்தின் இலச்சினையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த புதிய வடிவம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் பிப்ரவரி 7-ஆம் திகதி வெளியாகும் என Lufthansa நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்