புலம்பெயர்ந்தோரில் இரண்டில் ஒருவர் ஜேர்மானிய மொழித்தேர்வில் தோல்வி?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
337Shares
337Shares
lankasrimarket.com

குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்காக ஜேர்மனி அரசு நடத்தும் மொழித்தேர்வுகளில் தேர்வெழுதும் இருவரில் ஒருவர் தோல்வியடைவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனிக்குள் புதிதாக வருபவர்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் அகதிகள் மற்றும் புலம்பெயர்வோர் பாதிக்கும் மேல் அடிப்படை மொழித்தேர்வில் வெற்றி பெற முடிவதில்லை என்று புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான அரசு அலுவலகத்தை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் 339,578 பேர் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றனர்.

அவர்களில் 289,751 பேர் மட்டுமே இறுதித் தேர்வை எழுதினர்.

தேர்வு எழுதியவர்களில் 48.7 சதவிகித்தினர் மட்டுமே மொழித்தேர்வில் B1 என்ற நிலையை எட்டினர்.

சுமார் 40 சதவிகிதத்தினர் மட்டுமே A2 என்ற நிலையை எட்டினர், மீதமுள்ளோர் அந்த நிலையை கூட அடையவில்லை.

இந்த தேர்வுக்குப் பின், பங்கு பெறுவோர் அன்றாடம் உபயோகப்படுத்தப்படும் எளிய வாக்கியங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுவர்.

இப்படி பலர் தோற்பதற்கான காரணம் நோய் வாய்ப்படுவதனாலும், வேறு வேலை கிடைப்பதனாலும் இறுதித் தேர்வில் பங்கேற்க இயலாமல் போவதுதான் என்று அந்த பத்திரிகை தெரிவிக்கிறது.

இந்த தேர்வு எழுத விரும்புவோருக்கு இரண்டு வகையான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

ஒன்று 600 பாடங்கள் கொண்ட மொழிப்பாடம், அதைத் தொடர்ந்து ஜேர்மனியின் கலாச்சாரம், வரலாறு, சட்ட அமைப்பு மற்றும் குணாதிசயங்கள் ஆகியவற்றைக் குறித்த பாடங்கள்.

இரண்டிலும் தேர்வு பெறுவோருக்கே integration Course Certificate வழங்கப்படும்.

இது நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு உதவும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்