ஜேர்மன் நாட்டில் இனவெறி அதிகரித்துவிட்டது: ஆய்வில் தகவல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மன் நாட்டின் கிழக்கு மாகாணங்களில் இனவெறி அதிகரித்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டில் சர்வாதிகாரம் அதிகரித்துள்ளதால் அது ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜேர்மனியில் உள்ள சர்வாதிகார அணுகுமுறை பற்றிய ஒரு ஆய்வின் படி, வெளிநாட்டவர்கள் அரசை சுரண்டுவதற்கு மட்டுமே நாட்டிற்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். கிழக்கு ஜேர்மனியில் உள்ள இரண்டு பேரில் ஒருவர் இந்த உண்மையை நம்புவதாக கூறுகின்றனர்.

ஜேர்மனி ஏற்கெனவே வெளிநாட்டினரால் அபாயகரமாக மாறிவிட்டது என நம்புவதாக கிட்டத்தட்ட 35.6 சதவிகித கிழக்கு ஜேர்மானியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், 30 சதவீதத்திற்கும் மேலானவர்கள் ஜேர்மனியில் இனவெறி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என 60 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers