Brexitஆல் ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள பாத்ரூம் பிரச்சினை: ஒரு வித்தியாச செய்தி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரெக்சிட்டால் பல்வேறு நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஜேர்மனியில் ஒரு குறிப்பிட்ட துறையில் எதிர்பாராத ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளுக்காக ரெடிமேட் பாத்ரூம்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பிரெக்சிட்டால் என்ன நேருமோ என கவலையில் ஆழ்ந்துள்ளது.

பிரித்தானியா வெளியேறுவது அதன் சொந்த உரிமையாகவே இருக்கலாம் என்றாலும், ஒரு கிளப்பில் ஒருவர் இணைகிறாரென்றால் அதை விட்டு வெளியேறவும் தயாராக இருக்க வேண்டும், அதே நேரத்தில் அதை எப்படி செய்வது என்ற ஒரு திட்டமும் இருக்க வேண்டும் என்று கூறும் Detrich von Gruben, ஜேர்மனியிலுள்ள Deba என்னும் பாத்ரூம் செய்யும் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவர்.

பாத்ரூமின் டைல்களிலிருந்து பிட்டிங்குகள் வரை அனைத்து பாகங்களையும் தயாரித்து ஒரு முழுமையான பாத்ரூமாக பொருத்துவது வரை நடக்கும் பல்வேறு வேலைகளில் தட்ப வெப்ப நிலையின் பங்கு மிக முக்கியம்.

இப்படி டீ இலைகளை பக்குவமாக தயாரிப்பதுபோல, பார்த்து பார்த்து செய்யும் வேலைக்கு தொல்லையாக வந்தது பிரெக்சிட்.

தனது தவறு அல்லாத ஒரு விடயத்திற்காக தங்கள் நிறுவனம் பாதிக்கப்படப்போகிறது என்கிறார் இன்னொரு பங்குதாரரான Von Gruben ஜூனியர்.

பிரெக்சிட்டால் எங்கள் பாத்ரூம்கள் எல்லையில் மாட்டிக்கொள்ளலாம், அதனால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் அவற்றை டெலிவரி செய்ய இயலாமல் போகலாம்.

டெலிவரி செய்வதில் ஏற்படும் தாமதத்தால், கட்டிடம் கட்டுமிடத்தில் செலவுகள் அதிகரிக்கலாம், எல்லாவற்றையும் விட மோசம், வாடிக்கையாளர்கள் எங்களை விட்டு விட்டு வேறு நிறுவனங்களை நாடலாம் என்கிறார் அவர்.

இதுபோக தனது பாத்ரூம்களை செய்வதற்கு தேவையான பொருட்களில் 10 சதவிகிதம் ஃபிட்டிங்குகளிலிருந்து பைப்புகள் வரை, பிரித்தானியாவிலிருந்தும், சில மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து பிரித்தானியா வழியாகவும் கிழக்கு ஜேர்மனியிலுள்ள Debaவின் தலைமையகத்திற்கு வரவேண்டும் என்கிறார் அவர்.

பிரெக்சிட்டால் ஏற்பட இருக்கும் மாற்றங்களுக்காக பல முன்னேற்பாடுகளை செய்திருந்தாலும், இப்படிப்பட்ட அழுத்தமான சூழலிலும் அமைதிகாக்கும் எங்கள் பணியாளர்கள் குறித்துதான் நாங்கள் அதிக கவலை கொண்டுள்ளோம் என்கிறார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers