இந்தியாவிலிருந்து ஜேர்மனிக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்! சுவாரஸ்ய பின்னணி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உயரிய நோக்கில், சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னையிலிருந்து ஜேர்மனியின் Hamburg நகருக்கு சைக்கிளில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த பயணத்தின்போது அவர் 8500 கிலோமீற்றர்கள் சைக்கிளில் பயணிக்க உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த நரேஷ் குமார் அனைத்து வகை நவ யுக அடிமைத்தனத்துக்கும் ஒரு முடிவைக் கொண்டு வருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஈரான், துருக்கி, கிரீஸ், ஸ்லோவேகியா, பல்கேரியா மற்றும் ஆஸ்திரியா உட்பட 12 நாடுகள் வழியாக அவர் பயணிக்க இருக்கிறார்.

தன்னுடைய நோக்கம் குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் யாரானாலும் தனது சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டே பேசிக்கொண்டு வரலாம் என்கிறார் நரேஷ்.

36 வயதான நரேஷ், தனது பயணத்தின்போது கடத்தப்பட்டவர்கள் மற்றும் அடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்களைக் கொண்ட ஒரு சமுதாயத்திற்கு உதவுவதற்காக 30 லட்ச ரூபாய் திரட்ட இருக்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers