திகில் படங்களால் வந்த வினை: மாணவனை கொலை செய்து உடலை துண்டுகளாக நறுக்கிய அதிர்ச்சி சம்பவம்!

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனில் திகில் படங்களை பார்த்து கெட்டுப்போன இளைஞர் தன்னுடன் படித்த சகமானவரை சுத்தியலால் அடித்து கொலை செய்து உடலை துண்டுகளாக நறுக்கியுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஜேர்மனை சேர்ந்த 24 வயதான நாட் டி என்கிற இளைஞர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ம் திகதியன்று பொலிஸாரிடம் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறினார்.

தன்னுடன் படிக்கும் சீனாவை சேர்ந்த ஒரு மாணவனை கொடூரமாக கொலை செய்து, அவனை சிறுதுண்டுகளாக நறுக்கி எறிந்ததாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், நாட் டி கொடூரமான திகில் படங்களை அதிகம் பார்த்து வந்துள்ளார்.

அந்த வரிசையில் கொலை கதாபாத்திரமான Hannibal Lecter-ஐ தன்னுடைய தலைவனாக கொண்டு, அதனை போலவே கொலை செய்வது எப்படி என 30,000 முறை இணையத்தில் தேடியுள்ளார்.

இசை ஒன்று பின்னணியில் இசைக்க, ஒரு சுத்தியலை கொண்டு அந்த மாணவனின் தலையில் அடித்து கொலை செய்துள்ளான். பின்னர் அவனுடைய உடல் பாகங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அடைந்துள்ளான்.

அந்த பாகங்கள் அனைத்தும் ஒரு ஏரியில் நீச்சல் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. தலைப்பகுதி பாலத்திற்கு கீழே கிடந்தது. ஆனால் அவருடைய கல்லீரல் பகுதியை மட்டும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரேத பரிசோதனையில், அந்த பகுதி மட்டும் ஒரு கூர்மையான ஆயுத்தத்தால் ஆழமாக தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது என தெரியவந்தது. அதனால் கல்லீரலை குற்றவாளி சாப்பிட்டிருக்க வேண்டும் என சந்தேகம் தெரிவித்தார்.

இந்த விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளியை மனநல மருத்துவரிடம் ஆய்வுக்கு உட்படுத்துமாறும், அதன் மதிப்பீடு அறிக்கையை சமர்பிக்குமாறும் கூறி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers