ஜேர்மனில் 6 நகரங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் 6 நகரங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டதில் எவ்வித பொருளும் சிக்கவில்லை.

ஜேர்மனியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் காரணமாக 6 நகரங்களில் பல கட்டிடங்கள் காலிசெய்யப்பட்டன. கட்டிடங்களில் தேடிப் பார்த்தபிறகு, குறைந்தது நான்கு நகரங்களில் பொலிசார் சந்தேகத்திற்கு இடமின்றி எதுவும் கண்டுபிடிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

Kaiserslautern, Chemnitz, Rendsburg, Augsburg, Göttingen மற்றும் Neunkirchen ஆகிய 6 நகரங்களில் உள்ள பெரிய கட்டிடங்களுக்கு பொது மின்னஞ்சல் வழியாக இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதனால் சுமார் 2 மணிநேரம் இந்த கட்டிடங்களில் உள்ள பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொண்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஒரே நபரால் வெவ்வேறு நகரங்களுக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்றும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்