பேருந்து ஓட்டும்போது மொபைலில் சினிமா பார்த்த பெண்: பின்னர் நடந்தது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பவேரியாவில் பேருந்து ஒன்றை ஓட்டும்போது அந்த பேருந்தின் ஓட்டுநரான பெண், காதில் இயர்போன் மாட்டிக் கொண்டு மொபைலில் படம்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

சூரிச் நோக்கி சென்று கொண்டிருந்த பவேரியாவின் பிரபல பேருந்து நிறுவனம் ஒன்றின் பேருந்து ஒன்றை ஓட்டும்போது, அந்த பேருந்தின் ஓட்டுநர் மொபைலில் சினிமா பார்த்துக் கொண்டிருந்ததை பயணி ஒருவர் கவனித்திருக்கிறார்.

அதிர்ந்து போன அவர், அந்த ஓட்டுநர் சினிமா பார்ப்பதை தனது மொபைல் மூலம் படம் பிடித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமுற்ற அந்த பெண், அந்த பயணியை தாக்கி, மோசமாக திட்டியதோடு, பொலிசிலும் புகாரளிப்பதாக மிரட்டியிருக்கிறார்.

பேருந்து நிறுவனத்தில் அந்த பயணி புகாரளிக்க, நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பின்னர் மொபைலில் தான் எடுத்த புகைப்பட ஆதாரத்துடன் அவர் புகாரளிக்கவே, பேருந்து நிறுவனம் அந்த ஓட்டுநரை பணியிலிருந்து விலக்கியதோடு, இனி எதிர்காலத்திலும் தங்கள் நிறுவனத்தில் பணி புரிய அவர் அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவித்தது.

அந்த பயணி பேருந்து பயணத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு ரயிலில் ஏறி சூரிச் சென்று சேர்ந்ததோடு, இனி அந்த பேருந்து நிறுவனத்தின் பேருந்துகளை பயன்படுத்தப்போவதேயில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்