அமெரிக்கா-ஈரான் பிரச்சனையில் ஜேர்மனி.. அறிவித்தது அரசாங்கம்

Report Print Basu in ஜேர்மனி

ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றமான சுழல் நிலவி வரும் நிலையில், இதுகுறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளதாக ஜேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ, ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் ஏஞ்சலோ மெர்க்கலுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால், கடைசி நிமிடத்தில் எதிர்பாராத விதமாக பாம்பியோ, ஈராக் செல்ல நேரிட்டதால் மெர்க்கலுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட பாம்பியோ-மெர்க்கல் சந்திப்பு எதிர்வரும் 31ம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜேர்மனி அரசாங்க ஊடகப்பேச்சாளர், இச்சந்திப்பின் போது அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வரும் பதற்றம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என ஜேர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோவிடம் வலியுறுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers