ஜேர்மனியில் உயிரி ஆயுத தாக்குதல் நடத்த திட்டம்: தம்பதி கைது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் பெண் ஒருவரும் அவரது கணவரான துனிஷியா நாட்டவர் ஒருவரும் ஜேர்மனியில் உயிரி ஆயுத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரமான விஷமான ricin என்னும் விஷத்தை உயிரி ஆயுதமாக பயன்படுத்தி ஜேர்மனியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட Sief Allah H (30) மற்றும் அவரது மனைவி Yasmin (43) ஆகியோர், Cologne அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் 84 மில்லிகிராம் விஷத்துடன் கையும் களவுமாக சிக்கினார்கள்.

இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த கைது நடவடிக்கையால் ஜேர்மனியின் முதல், உயிரி ஆயுத தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டமாக இருக்கும் இடம் ஒன்றில் தாக்குதல் நடத்தி ஏரளமானோரை காயப்படுத்த திட்டம் தீட்டியிருந்தார்கள் அந்த தம்பதியர்.

பல வகை வெடி குண்டுகள் குறித்து ஆராய்ந்த அந்த தம்பதியர், கடைசியாக இந்த உயிரி ஆயுதத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் இணையத்தில் 3,300 ஆமணக்கு விதைகளை வாங்கி, அதிலிருந்து வெற்றிகரமாக சிறிய அளவு ricin என்னும் விஷத்தை தயாரித்துள்ளனர்.

அந்த விஷம், சயனைடை விட 6,000 மடங்கு அதிக விஷத்தன்மை உடையதாகும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் வெடி குண்டு தயாரிக்க பயன்படும் வேறு சில பொருட்களையும், அந்த வீட்டில் பொலிசார் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்க உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலை அடுத்து அந்த தம்பதி சிக்கினர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தனித்தனியே 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்டு மாத இறுதி வரை தொடரும் என்று தெரிகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்