ஜேர்மனி குறித்து பாகிஸ்தான் பிரதமர் கொடுத்த தவறான தகவல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனி ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு, ஜப்பான் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு. இதை வரலாறு படிக்கும் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள்.

இந்நிலையில், டெஹ்ரானில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியின்போது பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜேர்மனியும் ஜப்பானும் இரண்டாம் உலகப்போரின்போது எதிரெதிர் நாட்டு மக்களை கொன்று குவித்ததாக தெரிவித்தார்.

அத்துடன் ஜேர்மனியும் ஜப்பானும் எல்லைகளைப் பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்தார், அதாவது இரண்டு நாடுகளும் அருகருகே இருப்பதாக தெரிவித்தார் இம்ரான்கான்.

ஆனால் முதல் விடயம், இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியும் ஜப்பானும் ஒரே அணியில் இருந்தன.

அத்துடன் அவை அப்போதும் இப்போதும் அருகருகில் இல்லவே இல்லை, ஒன்றுக்கொன்று ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளன.

மேலும் ஜப்பான் ஒரு தீவு என்பதால் அது தனது எல்லையை எந்த நாட்டுடனும் பகிர்ந்துகொள்ளவும் இல்லை.

இந்நிலையில் அவரது உரையை கவனித்த மஹிந்த்ரா நிறுவனத்தின் Anand Mahindra, இம்ரான்கானை கிண்டல் செய்யும் விதமாக, கடவுளே, நல்ல வேளை இந்த ஜெண்டில்மேன் எனது வரலாறு ஆசிரியராகவோ, புவியியல் ஆசிரியராகவோ இல்லை என ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இம்ரான்கான் தனது உலக அறிவைக் காட்டுவதாக நினைத்துக் கொண்டு சொதப்புவது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்