கொரோனாவுக்கு பலியான முதல் ஜேர்மானியர்: கொரோனா எண்ணிக்கை 900 ஆனது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கொரோனாவுக்கு முதல் ஜேர்மானியர் பலியாகியுள்ளதோடு, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.

அந்த 60 வயது ஜேர்மானியர் ஒரு வாரம் முன்பு எகிப்துக்கு சென்றுள்ளார்.

அந்த ஜேர்மானியர் எகிப்தில் உயிரிழந்துள்ளதாக எகிப்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அந்த ஜேர்மானியர் எகிப்தில் உயிரிழந்துள்ளதையடுத்து, கொரோனாவால் ஆப்பிரிக்காவில் உயிரிழந்த முதல் நபரும் அவர் ஆகிறார்.

இதற்கிடையில், கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஜேர்மனியில் அதிகரித்தவண்ணம் உள்ளது.

ஜேர்மனியின் ராபர்ட் கோச் ஆராய்ச்சி நிறுவனம், ஞாயிறு மதியம் 3 மணி நிலவரப்படி, ஜேர்மனியில் 902 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn, இத்தாலி முதலான கொரோனா

அபாயம் உள்ள இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...