மற்ற நாடுகள் கொரோனாவை சமாளிக்க தடுமாறும் நிலையில், சிறப்பாக தாக்குப்பிடிக்கும் இரு நாடுகள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பல நாடுகள் கொரோனாவை சமாளிக்க தடுமாறும் நிலையில், ஜேர்மனியும் நெதர்லாந்தும் மற்ற நாடுகளைவிட சிறந்த முறையில் கொரோனாவை தாக்குப்பிடித்து வருகின்றன.

ஜேர்மனியிலிருந்து பெறப்பட்ட தரவுகள், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் வெறும் 0.4 சதவிகிதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

ஆனால் இதுவே இத்தாலியில் 9.5 சதவிகிதமாகவும் பிரான்சில் 4.3 சதவிகிதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்திலும் கொரோனா தொற்று பரவுதல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. அங்கு ஒருவரிடமிருந்து அடுத்த ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று பரவியுள்ளதாகவும், தொற்று பரவுவது நின்றுவிட்டது என்று கூறும் வகையில் உள்ளது என்றும் நெதர்லாந்தின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தெரிவித்துள்ளார்.

இது உண்மையென நிரூபிக்கப்பட்டால், இது மிகப்பெரிய வெற்றியாகும்.

சில நாடுகளில் இன்னமும் ஒருவரிடமிருந்து குறைந்தது ஐந்து பேருக்காவது கொரோனா பரவுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் புதனன்று மட்டுமே 5,146 பேருக்கு புதிதாக கொரோனா பரவியுள்ளது.

ஜேர்மனியில் காணப்படும் குறைந்த இறப்பு வீதம், நிபுணர்களையே குழப்பமடையச் செய்துள்ளது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு, நோய் வாய்ப்பட்டவர்கள், ஆரோக்கியமாக இருப்பவர்கள் என்று பார்க்காமல் எல்லோருக்கும் மிக வேகமாக ஜேர்மன் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆரோக்கியமாக காணப்படுவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவரும் பட்சத்தில், அவர்கள் கொஞ்சமே பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

நோய் பரவும் முன் நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடித்து அதை மற்ற நாடுகளை விட திறம்பட கட்டுப்படுத்தவும் செய்தது ஜேர்மனி.

எல்லாவற்றிற்கும் மேலாக, பனிச்சறுக்கு விளையாட்டின்போது, மற்ற நாட்டினருடன் கலந்து விளையாடியபோது கொரோனா தொற்றுக்கு ஆளான முதல் ஜேர்மானியர்கள், மிகவும் கட்டுக்கோப்பாகவும் செயல் திறனுடனும் இருந்ததால் அவர்களை கொரோனாவால் மேற்கொள்ளமுடியவில்லை என்ற ஒரு கருத்தும் பரவலாக காணப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்