கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதில் தென் கொரிய முன் மாதிரியை பின்பற்றும் ஜேர்மனி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
687Shares

கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில், தொற்றுச் சங்கிலியை முறிப்பதற்காக பெருமளவில் பரிசோதனை செய்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகிய நடைமுறைகளை கடுமையாக பின்பற்றிவருகிறது ஜேர்மனி.

தென் கொரியாவின் மாதிரியை பயன்படுத்தி ஜேர்மனி இந்த நடைமுறையை பின்பற்றுகிறது. தென் கொரியா, இந்த நடைமுறைகளை பின்பற்றி கொரோனா பரவுவதைக் குறைத்து உலகமே பொறாமைப்படும் நாடாக மாறியுள்ளது.

தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இருந்தாலும், ஜேர்மன் அரசு அலுவலர்களும், தொற்று நோயியல் நிபுணர்களும் பொதுமக்களின் மொபைல் போன்களை ட்ராக் செய்யும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

ஜேர்மனியின் இந்த திட்டம், தென் கொரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு கொரோனா பரவுதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவிய ‘trace, test and treat’ என்னும் திட்டத்தைப் பின்பற்றி செய்யப்பட்டுள்ளதாகும்.

அத்திட்டத்தின்கீழ், பெருமளவில் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகளை கண்காணித்தல் ஆகியவை செய்யப்படுகின்றன.

ஜேர்மனியும் தென் கொரியாவும் மிக வித்தியாசமான இரு வேறு நாடுகள் என்றாலும், தென் கொரியா கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தும் யுக்தி, ஒரு முன் மாதிரியாக ஏற்று பின்பற்றத்தக்கதே என்கிறார் ஜேர்மனியின் ராபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவரான Lothar Wieler.

அதில் மிக முக்கியமானது மொபைல் போன் டேட்டாவை ட்ரேஸ் செய்தலாகும் என்கிறார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்