ஜேர்மன் சேன்ஸலர் மெர்க்கலை ஹிட்லருடன் ஒப்பிட்ட அதிகாரியின் பதவி பறிப்பு

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலை ஹிட்லருடன் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்ட பின்லாந்துக்கான மால்டாவின் தூதர் மைக்கேல் ஜம்மித் தபோனா பதவி விலகியுள்ளார்.

சேன்ஸலர் மெர்க்கலை ஹிட்லருடன் ஒப்பிட்ட தபோனா, மெர்க்கலின் குறிக்கோள் என்பது ஐரோப்பாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எனவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஐரோப்பிய நாடுகள் கடந்த வெள்ளியன்று நினைவு கூர்ந்தன.

கூட்டுப்படைகளிடம் ஹிட்லரின் நாஜிகள் சரணடைந்ததை அடுத்தே இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பின்லாந்துக்கான மால்டாவின் தூதர் மைக்கேல் ஜம்மித் தபோனா தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்ட கருத்தே அவரது பதவிக்கு வேட்டு வைத்துள்ளது.

அதில், 75 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் ஹிட்லரின் போக்கை தடுத்து நிறுத்தினோம். தற்போது யார் எஞ்சலா மெர்க்கலை தடுத்து நிறுத்துவது? ஐரோப்பாவை ஆளும் ஹிட்லரின் கனவை அவர் நிறைவேற்றியுள்ளார் என தபோனா பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தபோனாவின் கருத்து 'மால்டாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை பிரதிபலிப்பவை அல்ல' என்று மால்டாவின் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று கூறியது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் மால்டா முறைப்படி ஜேர்மனியிடம் மன்னிப்பு கோரும் எனவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தபோனாவின் பேஸ்புக் கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் தூதர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்