இளம்பெண்களுக்கு இனிய முகத்துடன் வணக்கம் சொல்லும் நபர்... பின்பு அவர் செய்யும் கொடூர செயல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் இளம்பெண்களுக்கு இனிய முகத்துடன் வணக்கம் சொல்லும் நபர் ஒருவர், பின்பு மிக கொடூரமாக அவர்களை வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜூன் 12க்கு பிறகு, பெர்லின் மற்றும் அதன் அருகிலுள்ள இடங்களைச் சார்ந்த 8 பெண்கள் அவரிடம் சிக்கியுள்ளார்கள்.

புதர்கள் அடர்ந்த பகுதிகளுக்கு அருகில் தனியாக செல்லும் பெண்களை இன்முகத்துடன் வணக்கம் கூறும் ஒருவர், பின்னர் அவர்களை மிகக் கொடூரமாக வன்கொடுமை செய்வதாகவும், இதுவரை 8 பேர் அவரிடம் சிக்கியுள்ளதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பிரமாண்ட பொலிஸ் ஆபரேஷனைத் தொடர்ந்து, திங்களன்று அவர் யார் என்பதை அடையாளம் கண்டுபிடித்த பொலிசார், பின்னர் அந்த 29 வயது நபரை கைது செய்தார்கள்.

இதுவரை இப்படிப்பட்ட ஒரு குற்றவாளியைப் பார்த்ததில்லை என்று கூறும் பொலிசார், அந்த நபர் அந்த பெண்களை கவனித்துக்கொள்ள விரும்பியதாகவும், அவர்களுடன் டேட்டிங் செல்ல விரும்பியதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண்ணை வன்கொடுமை செய்த அந்த நபர், அந்த பெண் வீட்டுக்கு செல்வதற்காக தனது சைக்கிளை கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

இந்த விநோத வழக்கு விரைவில் நீதிமன்றம் வர இருக்கிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்