ஜேர்மனி தலைநகர் பெர்லினில் இனி இதற்கு தடை.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in ஜேர்மனி
669Shares

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க விதிக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காக இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்களை பெர்லின் நகரம் தடை செய்துள்ளது.

ஜேர்மனியில் கொரோனாவை தடுக்க விதிக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து சுதந்திரவாதிகள், அரசியலமைப்பு விசுவாசிகள், தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு ஆர்வலர்கள் உட்பட சுமார் 20,000 பேர் ஆகஸ்ட் 1 அன்று பெர்லனில் அணிவகுத்துச் சென்றனர்.

இதில் போராட்டகாரர்கள் முகக் கவசங்களை அணிந்துகொண்டு சமூக இடைவெளி கடைபிடிப்பதை பேரணியின் அமைப்பாளர்கள் உறுதிப்படுத்த தவறிய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கான உரிமைக்கும் தொற்றுநோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்திற்கும் இடையில் அதிகாரிகள் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என பெர்லின் உள்துறை செனட்டரான ஆண்ட்ரியாஸ் கெய்செல் கூறினார்.

கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் நாம் இன்னும் தொற்றுநோய்க்கு மத்தியில் தான் இருக்கிறோம் என அவர் கூறினார்.

வேறு சில பெரிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை ஜேர்மனியால் நிர்வகிக்க முடிந்தது, ஆனால் புதிய தினசரி வழக்குகளின் எண்ணிக்கை ஜூலை தொடக்கத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட காவல்துறையினருடனான பேச்சுவார்த்தையில் அவர்கள் முன்பு ஏற்றுக்கொண்ட விதிகளை வேண்டுமென்றே அந்த போராட்டத்தின் அமைப்பாளர்கள் மீறியதாக கெய்செல் கூறினார்.

இத்தகைய நடத்தை ஏற்கத்தக்கதல்ல. சதி கோட்பாட்டாளர்களுக்கும் வலதுசாரி தீவிரவாதிகளுக்குமான இடமாக பெர்லின் இருக்க தான் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்