தன் ஐந்து தம்பி தங்கைகளை தாய் கொலை செய்வதை கண்ணால் பார்த்த சிறுவன்: சமீபத்தில் வெளியான தகவல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1466Shares

நேற்று ஜேர்மனியில் பெண் ஒருவர் வீட்டில் அவரது ஐந்து குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Solingen என்னுமிடத்தில் உள்ள வீடு ஒன்றில் வாழ்ந்து வந்த Christiane K (27) என்னும் பெண், தன் மகனான Marcel (11) என்ற சிறுவனுடன் ரயிலில் பயணித்துள்ளார்.

அந்த சிறுவனை அவனது பாட்டி வீட்டுக்கு போகும்படி கூறிவிட்டு, ரயில் Duesseldorf என்ற இடத்தில் வந்த போது Christiane மட்டும் ரயிலிலிருந்து இறங்கியுள்ளார்.

ரயிலிலிருந்து இறங்கிய Christiane, ரயில் பாதையில் குதித்துள்ளார். என்றாலும் பலத்த காயங்களுடன் அவர் மீட்கப்பட்டுவிட்டார்.

கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் பாட்டி வீட்டுக்கு சென்ற Marcel, தன் தாய் தனது ஐந்து தம்பி தங்கைகளுக்கும் விஷம் கொடுத்த விடயத்தை பாட்டியிடம் தெரிவித்துள்ளான்.

உடனே அவனது பாட்டி பொலிசாருக்கு தகவலளிக்க, விரைந்து வந்த பொலிசார் குழந்தைகளை காப்பாற்ற எடுத்த முயற்சி பலனளிக்காமல் ஐந்து குழந்தைகளூம் மரணமடைந்துள்ளார்கள்.

இறந்த குழந்தைகளின் பெயர்கள், பையன்கள் Luca மற்றும் Timo, மற்றும் பெண் குழந்தைகள் Sophie, Leonie மற்றும் Melina என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், தம்பி தங்கைகளுக்கு Christiane விஷம் கொடுத்ததை Marcel பார்த்ததாகவும், அவனது தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் தற்போது பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 2014ஆம் ஆண்டு, Christiane தனது காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், தனது வீடு எரிந்துபோனதால் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் சமூக ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

என்றாலும் அவர் இப்படி பெற்ற குழந்தைகளை கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பது, அவர் பேசும் நிலைக்கு வந்தால் மட்டுமே தெரியவரும்.

இந்த கொரோனா பரவலாலும், ஊரடங்காலும், Christiane குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளும் அவர் அனுபவித்து வந்த துயரங்களும் கவனிக்கப்படாமலே கூட போயிருக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார் குற்றவியல் நிபுணர் ஒருவர்.


மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்