வெளிநாட்டில் கொல்லப்பட்ட ஜேர்மன் இளம்பெண்: துப்புக் கொடுப்பவர்களுக்கு மாபெரும் பரிசுத்தொகை அறிவிப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட ஜேர்மன் இளம்பெண் வழக்கை தீர்க்க உதவும் வகையில் துப்புக் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

பவேரியாவைச் சேர்ந்த Simone Strobel (25) என்ற இளம்பெண் 2005ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் Lismore நகரில் தனது காதலர் மற்றும் நண்பர்களுடன் வெளியே சென்றதைத் தொடர்ந்து மாயமானார்.

ஆறு நாட்களுக்குப் பிறகு, அவரது உடல் அருகிலுள்ள விளையாட்டுத் திடலில் மரங்களுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டது.

ஆனால், இதுவரை அவரது மரணம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே, Simone மரணம் தொடர்பாக பயனுள்ள துப்புக் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் பரிசு வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்