பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்
823Shares
823Shares
ibctamil.com

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில் புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

இதில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன.

தினசரி பீட்ரூட்டை உண்ணுவதன் மூலமாக சோர்வு தளர்ச்சி உடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.

பீட்ரூட்டை பச்சையாக உண்பதன் மூலம் நம் உடலில் இருக்கும் செல்களுக்குப் போதுமான அளவு ஃபோலிக் அமிலத்தின் சத்து கிடைக்கிறது.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

இதில் இருக்கும் போரான் எனும் இரசாயன மூலப்பொருள் உள்ளதால், இல்லற வாழ்க்கை ஆரோக்கியமான முறையில் வைத்திட உதவுகின்றது.

பீட்ருட் சாறை தண்ணீருடன் கலந்து இரவு உறங்க போவதற்கு முன்பதாக அருந்தி வர மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களுக்கு உடனடி நிவாரணம் தரும்.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்