மாதுளையின் மகத்தான மருத்துவ குணங்கள்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்
216Shares
216Shares
lankasrimarket.com

மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும், 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது, இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது மற்றும் தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது.

பிஞ்சைக் காயவைத்துப் பொடிசெய்து ஏலக்காய் தூள், கசகசாத் தூள், குங்கிலியத்தூள் ஒரு கிராம் அளவாகச் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்தால் சீதக் கழிச்சல் குணமாகும்.

பூவின் சாறும் அறுகம்புல்லின் சாறும் ஓரளவு சேர்த்துக் கொடுக்க மூக்கில் இருந்து குருதி வடிவது நிற்கும்.

மாதுளையின் விதையினை ஆண்கள் சாப்பிடுவதால் ஆண்மையைப் பெருக்கும் மற்றும் குடல் புழுக்களைக் கொல்லும்.

பெண்களுக்கு மாதவிடாயின் போது மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும் மற்றும் அதிகப்படியான ரத்த போக்கை கட்டுப்படுத்தும்.

3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொண்டு விழுதை வைத்து தலையை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று விடும்.

ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.

மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும், துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

ஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு இதில் ஏதாவது ஒன்றை அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.

கல்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் ஒரு டம்ளர் எடுத்து கலந்து இதை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து விடும்.

மாதுளம்பழச் சாறையும், அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவிற்கு பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்