தொப்பையை குறைக்கும் சீன மருத்துவம்: வயிற்றை சுற்றி இதை கட்டுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்

தொப்பையைக் குறைப்பதற்கான பல வழிகளை நாம் அறிந்திருப்போம், அந்த வகையில் சீன மருத்துவத்தில் உடல் எடையை குறைக்கும் எளிய மருத்துவம் ஒன்று உள்ளது. அதை பற்றி இப்போது தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்
  • பாடி லோஷன் அல்லது மில்க் க்ரீம் - 4 ஸ்பூன்
  • இஞ்சி பவுடர் அல்லது இஞ்சி சாறு - 1 டீஸ்பூன்
  • பிளாஸ்டிக் கவர் - 1
  • உல்லன் துணி - 1
செய்முறை

ஒரு கண்ணாடி கிண்ணத்தில் மில்க் க்ரீம், இஞ்சி பவுடர் அல்லது இஞ்சி சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அந்த கலவையை மைக்ரோ ஓவனில் 20 நொடிகள் வைத்து எடுத்தால், தொப்பையை கரைக்கும் க்ரீம் தயார்.

பயன்படுத்தும் முறை

தொப்பை குறைக்கும் க்ரீமை வயிற்றுப் பகுதியில் தடவி பிளாஸ்டிக் கவரை கொண்டு வயிற்றுப் பகுதியில் சுற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பின் பிளாஸ்டிக் கவரின் மேல் உல்லன் துணியை சுற்றிக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்?

இம்முறையை இரவில் படுக்கும் முன் செய்வதே சிறந்தது. ஒருவேளை பகலில் இம்முறையை மேற்கொள்வதாக இருந்தால், குறைந்தது 4 மணிநேரம் வைத்திருக்க வேண்டும்.

சீன மருத்துவத்தை செய்யும் போது பின்பற்ற வேண்டியவை?
  • தினமும் தவறாமல் குறைந்தது 40 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
  • தினமும் குடிக்கும் நீரின் அளவை குறைக்காமல், அதிகமாக குடிக்க வேண்டும்.
குறிப்பு

இந்த சீன மருத்துவ முறையை வாரத்திற்கு 3 முறைகள் பின்பற்ற வேண்டும். இப்படி தொடர்ந்து 1 மாதம் தவறாமல் செய்து வந்தால், தொப்பை குறைந்திருப்பதை காணலாம்.

மேலும் இம்முறை தொப்பை மட்டுமின்றி கை, தொடை போன்ற பகுதிகளில் தொங்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கவும் பயன்படுத்தலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers