சைனஸ் பிரச்சனையினை போக்ககூடிய இயற்கை மருத்துவம்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்
274Shares
274Shares
lankasrimarket.com

சைனஸ் பிரச்சனையானது இப்போது பெரும்பாலானவர்களை தாக்கியுள்ள ஒரு நோயாகும், நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாகவும் உள்ளது.

நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம்.

இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன.

இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.

காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல் போன்றவை சைனஸ் பிரச்சனைக்கான அறிகுறிகளாகும்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு கையாளகூடிய இயற்கையாக நமக்கு மூலிகை மருத்துவ முறைகளை பார்க்கலாம்.

  • துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து தொடந்து சாப்பிட்டுவர சைனஸ் பிரச்சனை குணமாகும்.
  • ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.
  • கசகசாப் பொடியில் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.
  • பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.
  • ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
  • அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.
  • 50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம்.
  • திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.
  • வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.
  • சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம். மேலும் லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம்.

அத்துடன் உணவில் தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி போன்ற உணவுகளை தினசரி சேர்க்க வேண்டியது அவசியமாகும். இதனால் சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற முடியும்.

குறிப்பு

குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை உணவில் சேர்வதை தடுப்பதால் சைனஸ் பிரச்சனை அதிகரிப்பதை தடுக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்