எலுமிச்சையில் மறைந்துள்ள அதிசயங்கள்: இரண்டாக வெட்டி வைத்தாலே போதும்

Report Print Printha in ஆரோக்கியம்

எலுமிச்சை பழமானது அழகு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு மட்டுமல்லாமல் நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவதற்கும் பல வகையான நன்மைகளை அள்ளித் தருகிறது.

இந்த எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் ஒரு ஓரத்தில் வைத்தால் வைப்பதால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், ஒருசில உடல்நல குறைபாடுகள் வராமலும் தடுக்கிறது.

நன்மைகள்
  • எலுமிச்சையின் நறுமணம் சுவாத்துடன் அறையினுள் இருப்பதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
  • நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்கள், உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அந்த நோய் தொற்று மேலும் அதிகரிக்காது.
  • எலுமிச்சை பழத்தின் நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்குவதால் அது நுரையீரலின் செயல்திறன் மற்றும் மூச்சு தொடர்பாக ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை குறைக்கும்.
  • மூளையின் நினைவுத்திறன் அதிகரிப்பதோடு மனம், மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • நோய்த்தொற்றுக்களை அழிக்கும் தன்மைக் கொண்ட எலுமிச்சை பழத்தை படுக்கை அறையில் வைப்பதால், அங்குள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
  • குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடைவதுடன், தோல் தொடர்பான நோய்கள் வராது.
  • எலுமிச்சை தோலை முழங்கை, முழங்கால் பகுதிகளில் தேய்த்துக் குளிப்பதால், உடல் முழுவது சுத்தமாகும்.
  • முகத்தில் எலுமிச்சை தோலை தேய்த்து வந்தால் கருவளையம், பருக்கள் போன்ற பிரச்சனைகள் வராது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்