8 மணிநேர டயட்டால் உடல் எடையை குறைக்கலாம்: வாரம் 3 நாட்கள் போதும்

Report Print Printha in ஆரோக்கியம்

உடல் எடையை வேகமாக குறைக்க 8 மணிநேர டயட் பெரிதும் உதவுகிறது. இந்த டயட்டின் படி, 24 மணிநேரத்தில் 8 மணிநேரம் உணவு, ஸ்நாக்ஸ் என்று சாப்பிடலாம்.

இந்த 8 மணிநேர டயட்டை ஒருவர் வாரத்திற்கு 3 நாட்கள் பின்பற்றினாலே போதும். இதோ டயட் இருக்கும் உணவு முறைகள்,

காலை எழுந்ததும்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் க்ரீன் டீ, காபி ஏதாவது எலுமிச்சை , கற்றாழை, இஞ்சி, நெல்லிக்காய் போன்ற ஜூஸ்களில் ஏதாவது ஒன்றை குடிக்கலாம்.

காலை உணவு

காலை உணவாக மணி 10-க்குள் கோதுமை ப்ளேக்ஸ் மற்றும் பால், வாழைப்பழ ஸ்மூத்தி அல்லது கேல் ஸ்மூத்தி, வேக வைத்த முட்டை மற்றும் கோதுமை பிரட் டோஸ்ட் இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிட வேண்டும்.

காலை உணவிற்குப் பின்

காலை உணவை உட்கொண்ட பின்பு, சிறிது நேரம் கழித்து ஸ்நாக்ஸாக சாப்பிட நினைத்தால், வெள்ளரிக்காய், தர்பூசணி சாலட், பாதாம் ஆகியவற்றை சாப்பிடலாம்.

மதிய உணவு

மதிய உணவாக மணி 12.30 - 1-க்குள் வேக வைத்த மீன் மற்றும் காய்கறிகள், கொழுப்பு குறைவான தயிர், மற்றும் வெஜிடேபிள் ரோல், கொழுப்பு குறைவான தயிர் மற்றும் சூரை மீன், வெஜிடேபிள் சாண்ட்விச் மற்றும் நற்பதமான பழச்சாறு இவற்றில் ஏதேனும் ஒரு ஒன்றை சாப்பிடலாம்.

மதிய உணவிற்கு பின்

மதிய உணவிற்கு பின் மிதமான அளவிலான ஒரு டார்க் சாக்லேட் அல்லது ஒரு ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் சாப்பிடலாம்.

மாலை ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸாக 4-க்கு மேல் ஒரு சிறிய பௌல் உருளைக்கிழங்கு வ்ராஃபர், ஒரு சிறிய பௌல் பாப்கார்ன், ஒரு சிறிய பௌல் நாசோஸ் மற்றும் கொழுப்பு குறைவான மயோனைஸ் ஆகியவற்றில் ஒன்றை சாப்பிடலாம்.

இரவு உணவு

இரவு உணவாக 6 மணிக்குள் க்ரில்டு வெஜிடேபிள் அல்லது சிக்கன் கபாப், பிரட் புட்டிங், ஆசியன் ஸ்டைல் சிக்கன் சூப்/ இந்தியன் ஸ்டைல் பருப்பு சூப், வெஜிடேபிள் சாலட் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ்,

காராமணி சில்லி மற்றும் 2-3 சப்பாத்தி, 1 டம்ளர் வெதுவெதுப்பான பால் ஆகியவற்றில் ஒன்றை சாப்பிடலாம்.

8 மணிநேர டயட்டில் எதை சாப்பிடக் கூடாது?
  • தேங்காய் எண்ணெய், வெண்ணெய் அல்லது மயோனைஸ் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
  • ஆல்கஹால், காற்றூட்டப்பட்ட மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்கள், பாக்கெட் பழச்சாறுகள் போன்றவற்றை தொடவே கூடாது.
  • 8 மணிநேர டயட்டின் போது இரவு உணவிற்கு பின் ஸ்நாக்ஸ் எதுவும் சாப்பிடக் கூடாது.
  • ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கக் கூடாது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.
  • உணவு உட்கொண்ட 1 மணிநேரத்திலேயே எந்த ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிடுவது மற்றும் மது அருந்துவது கூடாது.
  • 8 மணி நேர டயட்டை பின்பற்றும் போது போதுமான அளவு நீர் குடிப்பது மிகவும் அவசியம்.
பலன்கள்
  • 8 மணிநேர டயட்டை ஒருவர் பின்பற்றி வந்தால், விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம்.
  • செரிமானம் சிறப்பாக நடைபெறுவதற்கு தினமும் தவறாமல் குறைந்தது ஒரு கப் தயிரை சாப்பிடலாம்.
  • 8 மணிநேர டயட்டைப் பின்பற்றுவதுடன், வாக்கிங், ரன்னிங், நீச்சல், நடனம், மாடிப்படியில் ஏறி இறங்குவது போன்ற பயிற்சியையும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்