ஐந்தே நாளில் குறட்டை பிரச்சினையில் இருந்து விடுபடனுமா? அப்போ இரவில் படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர்.

இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு தவிக்கின்றனர்.

இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பானத்தை அருந்தினாலே போதும். தற்போது அந்த அற்புத பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஆப்பிள் - 2
  • எலுமிச்சை - 1/4
  • கேரட் - 2
  • இஞ்சி - 1 துண்டு
  • தண்ணீர் - 1/2 கப்
செய்யும் முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து குடிக்கவும்.

இந்த பானத்தை இரவில் தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் பருக வேண்டும்.

மேலும் இந்த பானத்தைப் பருகும் காலங்களில், ஒருசில உணவுகளையும், பானங்களையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவை நிலைமையை மோசமாக்கும்.

பானத்தைக் குடித்து, ஒருசில உணவுகளைத் தவிர்த்து வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி வெளியேறி, சுவாசக் குழாய் விரிவடைந்து, குறட்டை வருவது குறைய ஆரம்பிக்கும்

தவிர்க்க வேண்டிய உணவுகள்
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள்
  • எண்ணெயில் வறுத்த அல்லது பொரித்த உணவுகள்
  • எளிதில் செரிமானமாகாத உணவுகள்
  • அதிகப்படியான சாக்லேட்
  • அளவுக்கு அதிகமான ஆல்கஹால்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers