உங்களுக்கு வேகமாக எடையை குறைக்க ஆசையா? இந்த 9 புரோட்டீன் உணவுகள் சாப்பிட்டாலே போதுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
1865Shares

இன்றைய காலத்தில் ஆண்களும் சரி பெண்களுக்கு உடல் எடையால் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றார்கள்.

இதற்காக கண்ட கண்ட டயட்டுகளை பின்பற்றி வருகின்றனர். உண்மையில் சில ஆரோக்கிய உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் உடல் எடையை எளிய முறையில் குறைக்கலாம்.

இதற்கு புரத சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஏனெனில் புரத உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகிறது.

மேலும் புரத உணவுகளை சாப்பிடும் போது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் உங்களுக்கு அடிக்கடி பசிக்காது.

எனவே அந்த வகையில் உங்க எடையை குறைக்கும் 9 வகையான புரத உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஒவ்வொரு முட்டையிலும் ஒரு நல்ல புரதம் ஆறு கிராம் உள்ளது. முட்டையில் வெள்ளைக் கருவில் புரதமும், மஞ்சள் கருவில் ஒமேகா -3 நிறைந்த கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செலினியம் ஆகியவைகள் உள்ளன.
  • நட்ஸ் வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. இவை புரதத்தின் சிறந்த மூலமாக மட்டுமல்லாமல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. உப்பு மற்றும் வறுத்த நட்ஸ்களை தவிருங்கள்.
  • பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் அதிக அளவு புரோட்டீன் சத்து நிறைந்து உள்ளது. சோயா பீன்ஸ், பட்டாணி போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்க எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும். இது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
  • சிக்கனில் புரதம் அதிக எண்ணிக்கையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் மாட்டிறைச்சி மற்றும் பன்றிறைச்சியை விட இதில் அதிகமாக காணப்படுகிறது. எனவே சிக்கன் எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • யோகார்ட்டில் அதிகளவில் புரதம் காணப்படுகிறது. புரதம் இருமடங்காகவும் சர்க்கரை குறைவாகவும் உள்ளன. எனவே யோகார்டை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது உங்க உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
  • பிரக்கோலி தாவர அடிப்படையிலான புரதம் ஆகும். இதில் உடலுக்கு அவசியமான ஒன்பது அமிலங்களின் 8 அமிலங்கள் இந்த காய்கறிகளில் உள்ளது. இவற்றில் தண்ணீரில் கரையக்கூடிய விட்டமின்கள் உள்ளன. இதில் நார்ச்சத்துகள் இருப்பதால் எப்பொழுதும் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
  • குயினோவா எடை இழப்பை தரக்கூடிய தானியமாகும். இறைச்சியைப் போலவே இந்த தானியத்திலும் முழுமையான புரதங்கள் காணப்படுகின்றன. இது உடலுக்கு தேவையான ஒன்பது அமினோ அமிலங்களை கொண்டிருக்கும் சூப்பர் ஃபுட் ஆகும்.
  • மீனில் நிறைய புரதங்களை வழங்குகிறது, அதுவும் அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்பு இல்லாமல் வழங்குவது இதன் சிறப்பு. இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் முக்கிய மூலமாக இருக்கிறது.
  • நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தாவர அடிப்படையிலான புரதத்துடன் கொண்டைக்கடலை காணப்படுகிறது. சுண்டலும் உங்க எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்