நீங்கள் பயன்படுத்தும் முககவசங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானது? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்

Report Print Karthi in ஆரோக்கியம்
1019Shares

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.5 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், முககவசங்களின் தேவை மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆனால், நீங்கள் பயன்படுத்தும் முககவசங்கள் உண்மையிலேயே உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்கின்றனவா என்கிற கேள்வியை என்றாவது எழுப்பியுள்ளீர்கள்?

விஞ்ஞானிகள் சிலர் இந்த கேள்வியெழுப்பி விடையையும் நமக்கு கொடுத்திருக்கின்றனர்.

மீண்டும் மீண்டு பயன்படுத்தப்படக்கூடிய முககவசங்கள் வெறும் 7 சதவிகித தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டுமே வடிகட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

15 வகையான முககவசங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சூப்பர் ட்ரக், டெர்மின் 8 லைட்வெயிட் ப்ரீதபிள், லாயிட்ஸ் பார்மசி மற்றும் பிற இடங்களில் கிடைக்கும் எஸ்டிகெட் மாஸ்க் மற்றும் ஆஸ்டா ஒயிட் பேட்டர்ன் ஆகிய முககவசங்கள் பெரிதளவு பயனற்றவை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கண்டுபிடிப்புகளின் விளைவாக ஆஸ்டா அதன் முகத்தை விற்பனையிலிருந்து விலக்கியுள்ளது. டெர்மின் 8 மற்றும் சூப்பர் ட்ரக் நிறுவனங்கள் இந்த ஆய்வினை முற்றிலுமாக மறுத்துள்ளன. மேலும் தங்களின் முககவசங்கள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், மேலும், இந்த வழிகாட்டுதலில் பாக்டீரியா வடிகட்டல் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லையென்றும் கூறியுள்ளன.

NEQI நிறுவனத்தின் மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள முககவசங்கள் மற்றும், Bags of Ethics நிறுவனத்தின் முககவசங்கள் ஆகியவை பாக்டீரியாக்களை வடிகட்டுவதில் பங்கு வகிக்கின்றன என்றும் ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.

முககவசங்கள் எந்த அளவில் பாக்டீரியாக்களை வடிகட்டுகின்றன என்றும், சுவாசிக்கும் வசதி எந்த அளவில் உள்ளது என்றும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது அதன் தரம் எந்த அளவில் உள்ளது என முககவசங்கள் பரிசோதிக்கப்பட்டன என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாக ஒற்றை அடுக்கு கொண்ட முககவசங்களை காட்டிலும் மூன்று அடுக்குகளை கொண்ட முககவசங்கள் நீர்த்திவளைகளை நன்றாக வடிகட்டுவதாகவும், ஆனால் சுவாசிப்பதில் சிக்கலை கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்