சுவாதியின் வாழ்க்கையிலும் ஒரு பிலால்!

Report Print Arbin Arbin in இந்தியா
சுவாதியின் வாழ்க்கையிலும் ஒரு பிலால்!

சுவாதி படுகொலை விவகாரத்தை ஒட்டி திட்டமிட்டே பரப்பப்பட்ட மத சாதி ரீதியிலான கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவரது நெருங்கிய நண்பர் முகமது பிலால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதியின் நெருங்கிய நண்பரான முகமது பிலால் கடந்த ஒருவாரமாக தாமும் தமது நண்பர்களும் எதிர்கொண்ட சூழல் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் சுவாதியின் நடத்தை குறித்தும் பல வேறு கருத்துகள் வலம் வந்ததாக குறிப்பிடும் முகமது பிலால், சுவாதி படுகொலையில் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ள காவல் துறைக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். மட்டுமின்றி இந்த கொலை விவகாரத்தை ஊடகங்களும் பொதுமக்களும் எடுத்துக்கொண்ட விதம் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ராம் குமார் குறித்து பிலால் மற்றும் தனது நெருங்கிய நண்பர்களிடம் பல முறை சுவாதி புகார் தெரிவித்துள்ளாராம். கடந்த மே மாதத்தின் துவக்கம் முதலே, தன்னை யாரோ பின் தொடர்வதாக தமது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்துள்ளார் சுவாதி.

சுவாதியின் வீட்டின் அருகாமையிலும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலும் ராம் குமார் பல முறை சென்று நோட்டம் விட்டுள்ளார். இதுகுறித்து சுமார் 5 முறையாவது சுவாதி தனது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து தாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அந்த நபர் இதுவரை தம்மை அணுகி நேரடியாக பேச முயற்சிக்கவில்லை எனவும், குடும்பத்தினரை கலக்கமுற செய்ய வேண்டாம் எனவும், ராம் குமர் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க பிலால் மற்றும் நண்பர்கள் வற்புறுத்தியபோது சுவாதி தெரிவித்திருக்கிறார்.

சாதி மதம் உள்ளிட்டவைகளால் சமூகத்தை பிளவு படுத்த முயன்றவைகளை தங்களால் மறக்க முடியாது என கூறிய பிலால், நடந்து முடிந்தவை அனைத்தும் மிக கொடியதும் மிகவும் பரிதாபமான விஷயமெனவும் தெரிவித்துள்ளார்.

பிலால் மற்றும் சுவாதியின் நெருங்கிய நண்பர்களுக்கு எப்போதும் நினைவில் இருப்பது சுவாதியின் வாட்ஸ் அப் அரட்டைகளும் கேலிகளும் மட்டுமே.

பிலால் உள்ளிட்ட அவரது நெருங்கிய நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மட்டுமே சுவாதியின் குண நலன்கள் தெரியும். சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துகளுக்கு ஆயுள் மிக குறைவு எனவும் பிலால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராம் குமார் பொலிஸ் அதிகாரிகளுடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments