நாளை சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகிறார் ராம்குமார்!

Report Print Deepthi Deepthi in இந்தியா
நாளை சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகிறார் ராம்குமார்!

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமாரை, நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் ராம்குமாரை சென்னை கொண்டு செல்ல பொலிசாருக்கு நீதிபதி ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து ராம்குமாரை சென்னை கொண்ட வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக 108 அவசரஊர்திகள் வாகனம் ஒன்று ஓட்டுநர் மற்றும் உதவியாளருடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ராம்குமாருடன் செல்ல காது, மூக்கு, தொண்டை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

சென்னையில் ராம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ராம்குமார் நாளை காலை சென்னை எழும்பூர் குற்றவியல் பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments