பதவியே வேண்டாம் என ஓட்டம் பிடிக்கும் தேமுதிகவினர்! அதிர்ச்சியில் விஜயகாந்த்

Report Print Deepthi Deepthi in இந்தியா
பதவியே வேண்டாம் என ஓட்டம் பிடிக்கும் தேமுதிகவினர்! அதிர்ச்சியில் விஜயகாந்த்

தேமுதிகவில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு, புதியவர்களை நியமிக்க கட்சித் தலைமை விரும்பினாலும், 'பதவியே வேண்டாம்' என கட்சியினர் ஓட்டம் பிடிப்பதால், விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க படுதோல்வி அடைந்ததோடு, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும், 'டிபாசிட்' இழந்தார்.

அதனால், அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாற்று கட்சிகளுக்கு சென்றுள்ளனர். இப்படி கட்சி மாறும் பொறுப்பாளர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமித்து வருகிறார் விஜயகாந்த்.

ஆனாலும், மாவட்ட செயலர் பதவிக்கு மட்டுமே, பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். மற்ற பொறுப்புகளுக்கு, இதுவரை நிர்வாகிகள் நியமனம் நடைபெறவில்லை.

பொதுச் செயலர், கொள்கை பரப்பு செயலர், துணை செயலர், தொழிற்சங்க பேரவை செயலர், மகளிர்அணி செயலர் பதவி உட்பட, மாநில அளவிலான பல பதவிகள் காலியாக உள்ளன. அணி செயலர்கள் பதவிகளும் காலியாக இருக்கின்றன.

இப்படி மாநிலம் முழுவதும், கட்சியின் பல்வேறு மட்டங்களிலும், 90 சதவீதம் பதவிகள் காலியாக உள்ளன. இது, தே.மு.தி.க தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தே.மு.தி.க வட்டாரங்கள் கூறியதாவது:

தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. தே.மு.தி.கவினர் பலரும் கட்சி மாறி விட்டதால், சொற்ப அளவிலான நபர்களே, கூட்டத்துக்கு வருகின்றனர்.

இருப்பினும், கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க, கட்சித் தலைமை முடிவெடுத்து, ஆட்களை தேடிப் பிடிக்கிறது. அப்படி ஆள் பிடிக்கும் போது, 'எங்களுக்கு பதவியே வேண்டாம்' என, பலரும் ஓட்டம் பிடிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments