விக்னேஷ் இப்படி செய்வார் என கனவிலும் நினைக்கவில்லை: சீமான் வருத்தம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

விக்னேஷ் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என கனவிலும் கூட நினைக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.

காவிரி உரிமை மீட்புப் பேரணியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்தினார்.

இதில், நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவரணி பாசறை செயலாளர் விக்கேஷும் கலந்து கொண்டு உடலில் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து சீமான் கூறியதாவது, இப்படியொரு காரியத்தில் விக்னேஷ் ஈடுபடுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஒவ்வொருவரையும் பொத்திப் பொத்தித்தான் வளர்க்கிறேன். மனம் மிகுந்த சுமையாக இருக்கிறது. தமிழ் இன உணர்வோடு வளர்க்கப்பட்டவன். என்னுடைய பேச்சால் ஈர்க்கப்பட்டு, மன்னார்குடியில் கட்சி வேலை பார்த்துக் கொண்டிருந்தான். தேர்தல் நேரங்களில் கடுமையாக வேலை பார்த்தான்.

அதன்பிறகு வேலைக்காக சென்னை வந்தவன், ' அம்பத்தூரில் தங்கியிருக்கிறேன்' என்றான். அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் தம்பியை சேர்த்துவிட்டேன். வேலை நேரம் போக கட்சி வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய முகநூல் பதிவுகளில் தமிழ்த் தேசிய முதிர்ச்சியை பார்க்க முடியும். முத்துக்குமாரைப் போல உணர்வோடு வளர்ந்தவன். ஏதோ ஓர் ஆர்வத்தில் அமைப்பிற்குள் வந்தவன் அல்ல. மிகப் பெரிய தலைவனாக வரவேண்டிய ஒருவன், இப்படியொரு நிலையை எடுத்துவிட்டான்".

மேலும், அவனுடைய முகநூலை பார்க்கவே இல்லை, தற்கொலைப்படையாக மாறுவோம் என தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தான், ஆனால் அதனை உண்மையாக்குவான் என்று எதிர்பார்க்கவில்லை.

தம்பி விக்னேஷ் இறந்தது கட்சிக்காகவோ, எனக்காகவோ இல்லை. தமிழ் வாழ்க என்று சொல்லிவிட்டுத்தான் உயிர் நீத்திருக்கிறான். இது ஓர் உயர்ந்த நோக்கம்".

உயிரிழப்பதால் யாருடயை கவனத்தையும் ஈர்க்க முடியாது. கண்ணீiரைத் துடைக்கக் கரம் இல்லாத தனித்துவிடப்பட்ட இனமாக நாம் இருக்கிறோம்.

லட்சக்கணக்கான தமிழ்த் தேசிய இளைஞர்களை உருவாக்க வேண்டிய விக்னேஷ், தீக்குளித்து மரணித்துவிட்டான். மிகப் பெரிய இழப்பு. இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என தம்பிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். கட்சியின் உறுதிமொழி ஏற்பிலும் கட்டாயப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments