தினமும் செத்து கொண்டிருக்கிறேன்! உயிர் பயத்தில் வாழும் நபரின் கண்ணீர் பேட்டி

Report Print Santhan in இந்தியா
442Shares

கர்நாடகாவில் தாக்கப்பட்ட லொறி டிரைவர் ஒருவர், உயிர் பயத்தில் தினமும் அழுது கொண்டிருப்பதாக கூறியிருப்பது அவரது குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிவேல்(31). இவருக்கு கனகவல்லி என்ற மனைவியும். தர்ணேஸ்(5), காவியா(3) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.

லொறி டிரைவரான மணிவேல், கடந்த வாரம் மங்களூரில் இருந்து பெங்களூர் சென்றார், இவரை கர்நாடக இளைஞர்கள் சிலர் தாக்கி காவிரி கர்நாடத்திற்கு தான் சொந்தம் என கூறுமாறு வீடியோ எடுத்து வற்புறுத்தினர், இது தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது வரை தமிழகம் திரும்பாத இவர் கர்நாடக மாநிலம் சோலூர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் பிளாண்டில் தங்கியுள்ளார்.

இதுகுறித்து மணிவேல், லொறி ஓட்டிச் சென்ற போது 20 பேர் கொண்ட கன்னட இளைஞர்கள் தன்னை வழிமறித்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி நிர்வாணமாக நிற்கும்படி வற்புறுத்தியதாகவும், இதற்கு மறுத்ததால் தன்னை மிக கொடூரமாக அடித்து துன்புறுத்தி மிரட்டி சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்திற்காகவே உயிர் வாழ்வதாகவும், தினமும் பயத்தில் அழுது கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மணிவேல் மனைவி, தன் கணவரை கர்நாடகாவில் இருந்து விரைவில் மீட்டுத்தரும் படி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments