ஜெயலலிதாவின் உடல்நிலை: சாமியிடம் கண்ணீர் விடும் அதிமுக பெண்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 22ம் தேதி இரவு கடுமையான காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2 வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (04.10.2016) மாலை அப்போலோ மருத்துவமனை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் தொடர்ந்து இருக்குமாறு முதலமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், "எங்க அம்மா நல்லா இருக்கனும் சாமி" என கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர் அதிமுக மகளிர் அணி பெண்கள்.

அலகு குத்துவது, பால்குடம் ஏந்துவது, மண்சோறு சாப்பிடுவது, அம்மாவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட செயினை கழுத்தில் அணிந்து கொண்டு, அம்மா அம்மா என 24 மணி நேரமும் சுற்றி வருகின்றனர்.

இதனால் இந்த மாதம் ஆடி மாதம் போன்று பக்தி பரவசமாக காணப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments