இது மட்டும் இல்லன்னா கல்யாணம் பண்ணிக்காதீங்க

Report Print Deepthi Deepthi in இந்தியா

இன்று உலக கழிப்பறை தினம். இந்த தினம் மற்ற நாடுகளுக்கு தேவையோ இல்லையோ இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு கண்டிப்பான முறையில் இந்த நாளின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

"இருட்டிய பின்பு... இல்லையேல் விடியலுக்கு முன்பு" இது தான் இன்றைய இந்திய பெண்களின் நிலையாக உள்ளது. பல்வேறு கிராமங்கள் உட்பட சில நகரங்களில் கூட பொது இடங்களில் கழிப்பறை இல்லாத காரணத்தால், பல்வேறு பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிளார்கள்.

பொது கழிப்பறை இல்லாவிட்டால் கூட பராவியில்லை, வீட்டில் கூட ஒரு தனிகழிப்பறை கூட கட்டாமல் பல்வேறு கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்படி வீடுகளில் கழிப்பறை இல்லாத காரணத்தால், ஆண்களை விட பெண்ளே அதிக அளவில் பாதிக்கின்றனர்.

கோயில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம், ஆனால் கழிப்பறை இல்லாத வீட்டில் குடியிருக்க மாட்டோம் என பல்வேறு பெண்கள் தங்கள் திருமணத்தை நிறுத்திய செய்திகள் கடந்த ஓராண்டு காலமாக பத்திரிகைகளில் வெளியானதை பார்த்திருப்போம்.

இதற்கு பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தால் மக்கள் அதிகம் ஈர்க்கப்பட்டதே காரணம் ஆகும்.

தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்த கழிப்பறையை கட்டுவதற்கு அரசாங்கம் சார்பில் போதுமான நிதியுதவிகள் அளிக்கப்பட்டாலும், மக்கள் மத்தியில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கழிப்பறை இல்லாத பிரச்சனையில் வட இந்திய மாநிலங்களில் பல்வேறு பெண்கள் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இருட்டிய பின்பு பொது இடங்களில் பெண்கள் செல்லும்போது இவர்களை குறிவைக்கும் ஆண்கள் கூட்டம் ஏராளம்.

மேலும், சில பெண்கள் தங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்போது மாமியார் வீட்டில் கழிப்பறை இருக்கிறதா? என்பதை அறிந்துகொண்டுதான் திருமணம் செய்துள்ளார்கள்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரேகா என்ற பெண் தனது மாமியார் வீட்டில் கழிப்பறை இல்லை என்பதை அறிந்துகொண்டு மிகவும் துணிச்சலாக தனது திருமணத்தை தடுத்து நிறுத்தி வேறொரு ஆணை திருமணம் செய்து இந்திய மக்களின் பார்வையை தன் பக்கம் ஈர்த்தார்.

அதுமட்டுமல்லாமல், திருமணம் முடித்த பின்னர் கூட தனது கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாத காரணத்தால் சுனிதா தேவி என்ற பெண், தனது கணவரை விவாகரத்து கூட செய்துள்ளார்.

கழிப்பறை இல்லாத காரணத்தால், உயிரிழப்பு, விவாகரத்து போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் அது தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையோடு முடிந்துவிடுகிறது. எனவே வீட்டில் கழிப்பறை இல்லை என்றால் வீதியில் இறங்கி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டுவோம்.... நாட்டின் சுகாதாரத்தை காப்போம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments