விசித்திர நோயால் அவதி...8 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதிகளுக்கு Zeenia (3) மற்றும் எட்டு மாத குழந்தை Rayan என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் Zeenia பிறக்கும் போதே Hemaphagocytic Lymphohistiocytosis என்னும் விசித்திர நோய் இருந்துள்ளது.

அதாவது இது எலும்பு மஜ்ஜை (bone marrow) சம்மந்தமான பிரச்சனையாகும். இதை சரி செய்ய Zeenia வின் பெற்றோர் இந்தியாவில் உள்ள பெங்களூரு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையை நாடியுள்ளார்கள்.

Zeeniaவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உடலுக்கு பொருந்த கூடிய எலும்பு செல்களை வேறு ஒருவரிடம் இருந்து ஆப்ரேஷன் மூலம் செலுத்தினால் Zeenia வை காப்பாற்ற முடியும் என கூறினார்கள்.

ஏதேச்சியாக Zeeniaவின் தம்பி எட்டு மாத குழந்தை Rayan ன் உடல் செல்கள் அதனுடன் ஒத்து போக அதை எடுத்து மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து Zeeniaவை பிழைக்க வைத்துள்ளார்கள்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இந்த நோயின் தன்மை மிக கொடியது. எட்டு மாத குழந்தை Rayan எலும்பு மஜ்ஜை செல்கள் ஒத்து போனதால் தான் எங்களால் Zeenia வை காப்பாற்ற முடிந்தது.

தற்போது Zeenia மற்றும் Rayan இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments