ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்: சென்னை உயர்நீதிமன்றம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் கூறப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 22ம் திகதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி கடந்த 5ம் திகதி காலமானார்.

சிகிச்சை பெற்றபோது இவரது புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியாகவில்லை.

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்ட கொலை என கூறப்பட்டு வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றமும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கோரும் மனுவை இன்று விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், இறந்து போன ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments