ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கமெரா: அதிகாரப்பூர்வ ஆதாரம் இதோ

Report Print Basu in இந்தியா

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கமெரா இருந்தது என ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து சென்னை செய்தியாளர்களை சந்தித்து பேசிய லண்டன் மருத்துவர் பீலே உட்பட அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதா இருந்த ஐசியு அறையில் கமெராவே இல்லை எனறு சாதித்தனர்.

ஆனால் அப்பல்லோ மருத்துவமனையின் இணையதளத்தில் உள்ள இணைப்பில், அப்பல்லோ மருத்துவமனையின் ஐசியு வார்டுகளில் கமெரா உள்ளது என்றும், உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஐசியுவில் உள்ள நோயாளிகளை பார்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் எதற்காக இப்படி ஒரு பொய்யை கூறினார்கள் என்ற கேள்வியும், சந்தேகமும் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments