படுக்கை அறை காட்சிகளை நேரலையில் காட்டிய இளைஞர்: புகார் அளித்த மனைவி

Report Print Arbin Arbin in இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் நபர் ஒருவர் படுக்கை அறை காட்சிகளை இணையத்தில் நேரலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் 33 வயது ஐடி ஊழியர் ஒருவர் தமது மனைவியுடன் இருக்கும் படுக்கை அறை காட்சிகளை இணையம் வழியாக நேரலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் தீவிர விசாரணை நடத்திய ஐதராபாத் துணை பொலிஸ் கமிஷனர் (சைபர் கிரைம்), பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் தான் இந்த குற்றத்தை செய்ததாக கைது செய்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட 33 வயது ஐடி ஊழியர், சிறுவயதிலிருந்தே பாலியல் தொடர்பான விடயத்தில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் ஆண் விலைமகனாக பல பாலியல் இணையதளங்களில் பதிவு செய்து செயல்பட்டு வந்துள்ளார்.

இதனிடையே திருமணமான பின்னர், தன் மனைவியுடன் படுக்கை அறையில் இருப்பதை தன் பிரத்யேக கமெரா மூலம் பதிவு செய்து பார்ன் இணையதளங்களில் பதிவேற்றி வந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட சைபர்கிரைம் பொலிசார், வீடியோ பதிவேற்றியது கேரளாவின், திருச்சூர் பகுதியில் என ஐபி முகவரியை வைத்து தெரிந்து கொண்டனர்.

இதனையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்தியதில், பிடிபட்ட நபர், தாம் இதை பதிவேற்ற வில்லை எனவும், வேறொரு இணையதளத்தில் இருந்த வீடியோவை தாம் பதிவிறக்கம் செய்து, இந்த இணையதளத்தில் பதிவேற்றியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் அளித்த இணைய முகவரியில், வீடியோ பதிவேற்றம் செய்த ஐபி முகவரியை சோதித்ததில், புகார் அளித்த ஐதராபாத் பெண்ணின் வீட்டில் உள்ள லேப்டாப்பின் ஐபி முகவரியை காட்டியது.

இதையடுத்து அவரது கணவரை விசாரித்ததில் உண்மை தெரிந்தது. இதனையடுத்தே அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments