எடப்பாடி ஆட்சி கவிழுவது உறுதி? தினகரன் அதிரடி வியூகம்

Report Print Basu in இந்தியா

அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் தமது ஆதரவு 25 எம்எல்ஏக்கள் மூலமாக எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பதற்கான வியூகங்களை வகுத்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் சசிகலா அணி தற்போது எடப்பாடி அணி, தினகரன் அணி என உடைந்து போயுள்ளது. சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக என்ற முழக்கத்தை அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி அணி.

சென்னையில் முதல்வர் எடப்பாடி உட்பட அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், கட்சியிலிருந்து சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ளார்.

தங்களை ஓரம்கட்டிய இந்த அரசை கவிழ்க்க வேண்டும் என்பதில் தற்போது தினகரன் தரப்பு தீவிரமாக உள்ளது. தமக்கு ஆதரவாக உள்ள 25 எம்எல்ஏக்களை வைத்து எடப்பாடி அரசை கவிழ்க்கும் முயற்சிகளில் தினகரன் அணி இறங்கியுள்ளது.

தற்போது வரை வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் என 11 எம்எல்ஏக்கள் தினகரன் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க தினகரனுக்கு 17 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments