தமிழக மக்களுக்கு கமல்ஹாசன் முக்கிய வேண்டுகோள்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழக அரசை விமர்சித்த ஒரே காரணத்துக்காக தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வசை பாடி வந்தனர்.

இந்த நிலையில் கமல் தனது ரசிகர்களுக்கும், கட்சி பேதமின்றி வாக்களித்துவரும் மக்களுக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில்,

ஊழல் எங்கெல்லாம் பரவிக்கிடக்கிறதோ அங்கெல்லாம் தரவுகளை சேகரித்து அரசுக்கு அனுப்பி வையுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டுமின்றி, அரசுக்கு எதிராக களம்காணும் அனைவரையும் கைது செய்யும் அளவுக்கு சிறைகள் தமிழகத்தில் உள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக நேற்றிரவு கமல் பதிவு செய்த டுவீட் லேசாக அரசியல் பேசினாலும், அது பலருக்கும் புரியவில்லை. இன்று காலை, பா.ஜ.க-வின் எச்.ராஜா கமலை கடுமையாக விமர்சித்து இருந்தார். எல்லாவற்றிற்கும் சேர்த்து, கமல் இன்று தன் டுவிட்டர் தளத்தில் பதில் ஒன்றை பதிவு செய்து அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments