உயிரிழந்த அசோக்குமார் என்னுடைய நிழல்: உருகிய இயக்குனர் சசிகுமார்

Report Print Fathima Fathima in இந்தியா

இயக்குனர் சசிகுமாரின் மைத்துனரான அசோக்குமார் நேற்று சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரோடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார்.

தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அசோக்குமார் கடிதத்தில் உருக்கமாக எழுதியிருந்தார்.

அதில் கந்துவட்டி கொடுமையால் சிக்கித் தவித்து வருவதாகவும், சசிகுமாரை இவர்கள் சித்ரவதை செய்வதை சகிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் என்னை போல் நீயும் கோழை ஆகிவிடாதே, நீ கண்டிப்பாக நல்லபடியாக வாழ வேண்டும், சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னை விட்டு போகிறேன் எனவும் எழுதியிருந்தார்.

இதுகுறித்து இயக்குனர் சசிகுமார் கூறுகையில், என்னுடைய அத்தை பையன் அசோக் குமார், எனது நிழலாக இருந்தவன், இணை தயாரிப்பாளராக இருந்தார்.

என் படம், தயாரிப்பு உள்ளிட்ட அனைத்தையுமே அவன் தான் நிர்வகித்து வந்தான்.

'கொடி வீரன்' வெளியீட்டு விஷயத்தில் ரெட் போட்டிருந்தார்கள், பணப்பிரச்சினையால் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான்.

கடிதம் எழுதி வைத்திருக்கிறான், இதற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்